×

வேகமாக மலையேற வைக்க போதை பொருள்: சார் தாம் யாத்திரையில் 20 நாளில் 60 கழுதை பலி: மலைப் பாதைகளில் சுருண்டு விழுந்து சாகும் பயங்கரம்

டேராடூன்:  உத்தரகாண்ட்டில் நடந்து வரும் சார்தாம் யாத்திரையில் கடந்த ஒரு மாதத்தில் 90 யாத்திரீகர்கள் இறந்துள்ளனர். மேலும், மனிதர்களையும், அவர்களின் உடைமைகளையும் சுமந்து செல்ல  பயன்படுத்தப்படும் 60 கழுதைகளும் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புனித தலங்களுக்கு, கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சார்தாம் எனப்படும் யாத்திரை நடத்தப்படவில்லை. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 6ம் தேதி முதல் இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதில், பல லட்சம் பக்தர்கள்  பங்கேற்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த யாத்திரையில் இதற்கு முன்பு இல்லாத வகையில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

மனிதர்கள் மட்டுமின்றி, இந்த முறை பக்தர்களையும், அவர்களின் உடைமைகளையும் சுமந்து செல்லும் கழுதைகளும் அதிகளவில் இறக்கும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. சார்தாம் யாத்திரை கரடு முரடான மலைப்பாதைகளை கொண்டது என்பதால்,  வயதானவர்கள், சிறுவர்களால் மலையேற முடியாது. இவர்கள் கோவேறு கழுதைகள் மூலம் மலைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். தனியார், அரசு மூலமாக இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு  கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், கேதார்நாத் மலைப் பாதையில்  20 நாட்களில் 60 கழுதைகள் சுருண்டு விழுந்து இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்களை வேகமாக கோயிலுக்கு அழைத்துச் சென்று திரும்ப வேண்டும் என்பதற்காகவும், அதிக பக்தர்களை அழைத்து சென்று அதிக பணம் சம்பாதிக்க வேண்டும்  என்ற பேராசை காரணமாகவும், கழுதைகளுக்கு போதை பொருட்கள் தரப்படுவதே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், மலையேற  சிரமப்படும் கழுதைகளை அதன் உரிமையாளர்கள் கடுமையாக தாக்குவதும் இதற்கு மற்றொரு காரணம். ஒரு நாளைக்கு ஒரு கழுதையை ஒருமுறை மட்டுமே மலையேற பயன்படுத்த வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஆனால், கழுதைகளின் உரிமையாளர்கள், அதை பலமுறை மலையேற வைக்கின்றனர்.  போதை அளிக்கப்பட்ட கழுதைகள், மலையேறும் போதே இதயதுடிப்பு அதிகமாகி ஆங்காங்கு செத்து விழுகின்றன. இதுபோன்ற காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால், கழுதைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கும்படி கோரிக்கை வலுத்து வருகிறது.  90 பக்தர்கள் மரணம் சார்தாம் யாத்திரையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 90 பக்தர்கள் இறந்துள்ளனர். மாரடைப்பு, இதர உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மக்கள், யாத்திரை செல்லும் பாதையில் ஆங்காங்கு இறக்கின்றனர். இதன் காரணமாக, மலைப் பாதைகளிலும் மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையை உத்தரகாண்ட் அரசு அதிகரித்து, மருத்துவர்களை நியமித்து இருக்கிறது.


Tags : Sir ,Tham , Drugs to speed up mountaineering: 60 donkeys killed in 20 days on Sir Tham pilgrimage
× RELATED ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய...